Wednesday, December 23, 2015

காளிதாஸ மஹாகவியின் சிவபக்தி
பாஷ்யபாவக்ஞ வரஹூர்
கல்யாணஸுந்தர சாஸ்திரிகள்
 [சிவஞான பூஜா மலர் – துன்மதி ஆண்டு - (1981)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]
      கவிஞர்கள் திலகம் என்றும், கவிச்சக்கரவர்த்தி என்றும், கவிசார்வபெளமன் என்றும் பலவாறாக யாவராலும் போற்றப்பெற்ற காளிதாஸ மஹாகவி கவிஞனாக மட்டும் இவ்வுலகில் திகழவில்லை. பெரிய தத்துவ ஞானியாகவும் திகழ்ந்திருந்தார் என்பது அவரது நூல்களை நன்கு ஆராய்ந்து அறிந்தவர்களுக்கு தெளிவாகத் தெரியும். உண்மைப் பொருளான ஒரே வஸ்துதான் பிரம்மா எனவும், விஷ்ணு எனவும், மஹேசன் எனவும் மூன்று வகையான தோற்றங்களில் உள்ளது என்று கூறியிருப்பினும், மஹேச்வரனது மூர்த்தியிலேயே இந்த மஹாகவியின் மனது எப்பொழுதும் ஈடுபாடு உடையதாக இருந்திருக்கிறது என்பதும் அவரது நூல்களை அடிமுடிகளில் காணப்படும் பல செய்யுட்களைக் கொண்டு ஆயுமிடத்து அறியப்படுகின்றது. அவற்றில் ஒன்றிரண்டு செய்யுட்களை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
      அபிக்ஞான சாகுந்தலம் என்னும் அவரது நூலின் தொடக்கத்தில் காணப்படும் ஒரு செய்யுளின் கருத்தைச் சற்று விளக்கும் வகையால் அவரது மஹோ பக்தியை நன்கு எடுத்துக்காட்ட முடியும் என்று நம்புகிறோம்.
                                யா ஸ்ருஷ்டி: ஸ்ரஷ்டுராத்யா வஹதி விதிஹுதம்
                     யா ஹவிர்நா ச ஹோத்ரீ
            யே த்வே காலம் விதத்த: ச்ருதிவிஷயகுணா
                     யா ஸ்திதா வ்யாப்யவிச்வம் |
              யாமாஹு: ஸ்ர்வபூதப்ரக்ரதிரிதி
                     யயா ப்ராணிந: ப்ரானவந்த:
              ப்ரத்யகக்‌ஷாபி ப்ரபன்னஸ்தனுபிரவது
                     வஸ்தாபிரஷ்டாபிரீச: ||
               
ஈச வோ ()வது – மஹேசன் உங்கள் யாவரையும் காப்பாற்றட்டும், எத்தகைய மஹேசன் எனில், அஷ்டாபிஸ்தனுபி: ப்ரபன்ன:- எட்டு வகையான தோற்றங்களில் உள்ள மஹேசன், எத்தகைய தோற்றங்கள் எனில் ப்ரத்யக்‌ஷாபி:- புலன்களால் நன்கு அறியத்தக்க வகையில் உள்ள தோற்றங்கள், எட்டு வகையான தோற்றங்கள் யாவை எனில் (1) யா ஸ்ரஷ்டு ஆத்யா ஸ்ருஷ்டி:- எது ஒன்று பரமனின் படைப்பில் முதலாவது படைப்போ அது. அதாவது ஜலம் இதுவே பரமனின் படைப்பில் முதலாவதாகக் கூறப்பட்டு உள்ளது. அப ஏவ ஸஸர்ஜாதெள என்பது மநு வசனம் (2) எது ஒன்று விதிமுறைப்படி தேவர்களைக் குறித்து ஹோமம் செய்யப்பட்ட ஹவிஸ்ஸை தேவர்களின் பொருட்டு எடுத்துக் செல்கிறதோ அது, அதாவது அக்னி; அக்னிமுகாவை தேவா: என்பது வேதவசனம். (3) எது ஒன்று தேவர்களின் பொருட்டு விதிமுறைப்படி ஹவிஸ்ஸை ஹோமம் செய்கின்றதோ அது. அதாவது யஜமானன் (4, 5) யே த்வே காலம் விதத்த:- எவை இரண்டு, திதி வாரம் என்றும் இரவு பகல் என்றும் காலத்தைப் பிரித்துக் கொடுக்கின்றனவோ அவை அதாவது சூரியனும், சந்திரனும்; சூரியனைக் கொண்டு வாரமும் பகலும், சந்திரனைக் கொண்டு திதியும் இரவும் அறியப்படுகின்றன. (6) ச்ருதிவிஷயகுணா யாஸ்திதாவ்யாப்ய விச்வம் – எனு ஒன்று காதுகளால் அறியப்படும் சப்தத்தைத் தனது தனிக் குணமாகக் கொண்டு உலகத்தையே சூழ்ந்து நிற்கின்றதோ அது, அதாவது ஆகாயம். சப்த குணகமாகாசம் என்பது ஆன்றோர் வாக்கு. ஆரகாவத்ஸர்கவத என்பது வேத வசனம். ஆகாயம் மானஸப்ரத்யக்‌ஷ விஷயம் என வேதாந்திகள் கூறுவர் (7) யாமாஹு ஸர்வ: பூதப்ரக்ருதிம் எது ஒன்றை எல்லா ஜீவராசிகளின் தோற்றத்திற்கும் மூல காரணமெனக் கூறுகின்றார்களோ அது, அதாவது, பூமி ப்ருதிவ்யா ஒஷதய: ஒஷதிப்யோ ()ன்னம் அன்னாத் புருஷ: அந்நாத்வை ப்ரஜா: ப்ரஜாயந்தே என்பவை உபநிஷத் வசனங்கள். (8) யயா ப்ராணின: ப்ராணவந்த:- எது ஒன்றால் உயிரினங்கள் உயிரினங்களாகின்றனவோ அது அதாவது வாயு. நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்‌ஷம் ப்ரம்மாஸி என்பது உபநிஷத் வசனம். இவையே எட்டு வகையான தோற்றங்கள். இவை மட்டும் மஹேசனின் தோற்றங்கள் என்பது இவ்விடத்தில் கருத்தல்ல. இவையாவும் எந்த உலகத்தினுட்பட்டவையோ அந்த உலகம் முழுவதுமே மஹேசனின் தோற்றமே அன்றி வேறில்லை என்பதே கருத்தாகும். ஸர்வம் கலு இதம் ப்ரம்ம என்பது உபநிஷத் வசனம். இவ்வாறு மஹேசனிடம் தனக்குள்ள ஈடுபாட்டை மஹாகவி இங்கு வெளியிட்டிருக்கிறார். இவ்வாறே வேறு பல இடங்களிலும் பல முறையில் இதை வெளிப்படுத்தியிருக்கிறார். மற்றும்,
                 பூரம்பாம்ஸ்யனலோனிலோம்பர மஹர்நாதோஹிமாம்சு: புமான்
              இத்யாபாதி சராசராத்மகமிதம் யஸ்யைவ மூர்த்யஷ்டகம் |
       நான்யத்கிஞ்சன வித்யதே விம்ருசதாம் யஸ்மாத் பரஸ்மாத்விபோ:
              தஸ்மை ஶ்ரீ குருமூர்த்தயே நமஇதம் ஶ்ரீதக்‌ஷிணா மூர்த்தயே ||

என்னும் கீழ்க் கூறிய கருத்தே செறிந்து விளங்கும் ஶ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் அவர்களின் செய்யுளை மஹாகவியின் செய்யுள் ஞாபகப்படுத்திக் கொண்டு வருவது குறிப்பிடத் தக்கதாகும்.
      ஒருவர் தத்துவ ஞானியானாலும் சமதர்சனம் கொண்டவர் ஆனாலும், குறிப்பிட்ட ஒரு மூர்த்தியில் அவரது மனத்திற்கு இயற்கையான ஈடுபாடு உண்டு என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.
                மஹேச்வரே வா ஜகதாமதீச்வரே
              ஜனார்த்தனே வா ஜகதந்தராத்மனி |
       ந காபி பேதப்ரதிபத்திரஸ்தி மே
              ததாபி பக்திஸ்தருணேந்து சேகரே ||

என்பது ஶ்ரீமத் அப்பய்ய தீக்‌ஷிதரின் வாக்கு.
      மஹாகவியின் விக்ரமோர்வசீயம் என்ற நூலில் உள்ள ஒரு ஸ்லோகத்தையும் காண்போம்.
                வேதாந்தேஷு யமாஹுகே புருஷம் வ்யாப்ய ஸ்திதம் ரோதஸீ
              யஸ்மின்னீச்வர இத்யநன்ய விஷய: சப்தோ யதார்தாக்ஷர:  |
       அந்தர்யச்ச முமுக்ஷுபிர்நியமித ப்ராணாதிபிர்ம்ருக்யதே
              ஸ ஸ்தாணு ஸ்திரபக்தியோகஸுலபோ நிச்ரேய ஸாயாஸ்து வ: ||

      ஸ ஸ்தாணு: அந்த மஹேசன் :நி:ச்ரேயஸாயா அஸ்து உங்களுக்கு மோக்ஷ பர்யந்தமான பலன்களைக் கொடுக்கட்டும் எங்கும் நிறைந்து பொருளானதால் அசைவற்ற நிலையிலேயே நிலைத்திருப்பதால் மஹேசனுக்கு ஸ்தாணு என்ற பெயர் உரியதாயிற்று. கிளைகள் அற்று மொட்டையாய் இருக்கும் மரத்திற்கும் ஸ்தாணு என்று வடமொழியில் ஒரு பெயர் உண்டு. கிளை இலைகளுடன் மரம் கூடியிருப்பின் காற்றடிக்கும் நேரத்தில் அது அசைய இடமுண்டு. அவைகள் இல்லாததால் காற்றடித்தாலும் அது அசையாது. ஆகவே அசையாய் பொருளுக்கு அதை உதாரணமாகக் கூறுவது பரபு. அதுபோல் மஹேசன் அசையா நிலையிருப்பதால் ஸ்தாணு என்று சொல்லப்படுகிறார் என்றும் கூறுவதுண்டு. வ்ருக்ஷ இவ ஸ்தப்தோ திவி திஷ்டதி என்கிறது வேதம். ஸ்ஏவ ஜகதாம் நாத ஸ து ஸம்ஸார மோசக என்னும் வசனம் அவரே மோக்ஷத்தை கொடுக்க வல்லவர் என்பதைத் தெரிவிக்கிறது. எந்த மஹேசன் எனொல் வேதாந்தேஷுயமாஹுரேகபுருஷம் அதர்வசிகை, ச்வேதாச்வதரம் முதலிய உபநிஷத்துக்கள் எந்த மஹேசனைத்தான் ஒருவர் என்றும் புருஷன் என்றும் கூறுகின்றனவோ அந்த மஹேசன். ஒன்றேயான உண்மைப் பொருளானதால் ‘ஏகம்’ என்றும் பூர்ணராய் இருப்பதாலும் பூ: எனப்படும் ஸர்வ ஜீவராசிகளின் சரீரங்களுள் ப்ரகாசித்துக் கொண்டிருப்பதாலும் ‘புருஷம்’ என்றும் மஹேசனே கூறப்படுகிறார். ‘ஏக ஏவ ருத்ரோ ந த்விதீயாய தஸ்தே’ ‘தேநேதம் பூர்ணம் புருஷேண ஸர்வம்’ என்பன போன்றவை வேதவசனங்கள். ‘புருஷோ நாம ஸம்பூர்ண: சிவ:’ ‘ஸாம்பமூர்த்திதரோ நான்ய: விஷ்ணுரஜோபிச’ என்கிறது புராணம். மேலும் வ்யாப்ய ஸ்திதம் ரோதஸீ – பூமி அந்தரிக்ஷம். அதாவது உலகம் முழுமையும் வ்யாபித்து நிற்கும் தன்மையுள்ள மஹேசன் ‘தஸ்மாத் ஸர்வ கத: சிவ: | யோ ருத்ரோ விஸ்வா புவநா விவேச தஸ்மை ருத்ராய நமோ அஸ்து’ என்று உபநிஷத்துக்கள் கூறுகின்றன. மேலும் யஸ்மின் ஈச்வர இதி சப்த அனன்ய விஷய: யதார்த்தாக்ஷர:- எந்த மஹேசனிடத்தில் மற்றவர்களிடத்தில் பொருந்தாத ஈச்வர: என்னும் சப்தமானது மிகப் பொருத்தமான பெயராக அமைந்துள்ளதோ அந்த மஹேசன். ‘ஈச்வர: ஸர்வபூதாநாம்’ ‘ஈச்வராணாம் பரமம் மஹேச்வரம்’ என்பன போன்ற உபநிடத வாக்கியங்களும், ‘சப்தாதேவ ப்ரமித:’ என்ற பிரம்மசூத்திரம் இக்கருத்தையே வலியுறுத்துகின்றன. மஹாகவி காளிதாஸரும் இக்கருத்தை மேலும் தெளிவாக ஐயப்பாட்டிற்கே இடமின்றிப் பின்வருமாறு கூறுகிறார்.
                                அணிமாதி குணோபேர மஸ்ப்ருஷ்ட புருஷாந்தரம் |
              சப்தமீச்வர இத்யுச்சை: ஸார்த்த சந்த்ரம் பிபர்திய: ||
      
மேலும் நியமிதப்ராணாதிபிர்முமுக்ஷுபி:: அந்தர் ம்ருக்யதே – மோக்ஷத்தை விரும்பி ப்ராணன், ஐம்புலன்கள், மனம் முதலியவற்றை வெளி விஷயங்களில் விடாமல் தடுத்து ஹ்ருதயத்துக்குள் எவரைக் காணவேண்டி முனிவர்கள் தேடுகிறார்களோ அந்த மஹேசன்; ‘யோ வேத நிஹிதம் குஹாயாம் ஸோச்நுதே ஸர்வான் காமான் ஸஹ’ என்று கூறுகிறது ஆனந்தவல்லீ. ‘ஸர்வ பூதேஷு கூடம் | ஈசம் தம்ஞாத்வாம்ருதா பவந்தி | என ச்வேதாச்வதரம் கூறுகிறது. ‘ஹ்ருதயாம்போஜ மத்யே உமாஸஹாயோ த்ருத்யதி | தம் த்ருஷ்ட்வா மனுஜ் ஸ்ர்வோ விமுக்தோ பவதி’ எனப் புராணங்கள் கூறுகின்றன. இதுவே இச்செய்யுளின் பொருளாகும்.
      காளிதாச மஹாகவியின் மாளவிகாக்னிமித்ரம் என்ற நாடக நூலின் முதற்கண் காணப்படும் ஸ்லோகத்தையும் கீழே காண்க.
                ஏகைச்வர்யே ஸ்திதோபி ப்ரணத பஹுபலே ய: ஸ்வயம் க்ருத்திவாஸா:
       காந்தா ஸம்மிச்ரதேஹோப்ய விஷயமனஸாம் ய பரஸ்தாத்யதீனாம் |
       அஷ்டாபிர்யஸ்ய க்ருத்ஸ்னம் ஜகதபி தனுபிர்பிப்ரதோ நாபிமான:
       ஸன்மார்க்காலோகனாய வ்யபநயது ஸ வஸ்தாமஸீம் வ்ருத்திமீச: ||

ஸஈச:- அந்த மஹேசன், : உங்களுடைய தாமஸீம் வ்ருத்திம் உண்மையை மறைக்கும் தன்மையைத் தனதாகக் கொண்ட முக்குணத்தில் ஒன்றான தமோகுணத்தினால் தோற்று விக்கப்படும் மனோவ்ருத்தியை அதாவது அறியாமையை, வ்யபநயது – முழுமையாகப் போக்கட்டும்; எதற்காகவெனில், ஸன்மார்காலோகநாய – இது நல்வழி, இது தீயவழி என்ற நல்லறிவைப் பெறுவதற்காக எந்த மஹேசன் எனில், ப்ரணதஹுபலே ஏகைச்வர்யே ஸ்திதோபி தன்னை வணங்கும் யாவருக்கும் அவரவர் விரும்பும் பயன்களைத் தேவைக்கு அதிகமாகவே அவர்களுக்கு வழங்கவல்ல பெருஞ் செல்வம் படைத்தவராயிருந்தும், ஸ்வயம் க்ருத்திவாஸா: தோலை மட்டுமே தனது ஆடையாகக் கொண்டிருக்கும் மஹேசன், மற்றும் காந்தாஸம்மிச்ரதேஹோபி – தனது தேஹத்திலேயே கலந்து நிற்கும் பெண்ணுருவைக் கொண்டிருப்பினும் அதாவது தோற்றத்தில் அர்த்தநாரீச்வரராயிருந்தும், அவிஷய மனஸாம் யதீனாம்பரஸ்தாத் – விஷயங்களில் அறவே பற்றற்ற மனதைக் கொண்ட துறவிகளுள் முதன்மையாக விளங்கும் மஹேசன், மற்றும் முன் செய்யுளில் விளக்கப்பட்ட அஷ்டாபிஸ்தனுபி: - எட்டுவகையான சரீரங்களாலும் க்ருத்ஸ்னம் ஜகத் – எல்லா உலகங்களையும், பிப்ரதோபி – தாங்கிநின்று காப்பாற்றும் நிலையில் தானிருந்தபோதிலும், யஸ்ய – எந்த மஹேசனுக்கு, நாபிமன: – அத்தகைய நிலையில் ஏற்படும் ஆணவம் சிறிதளவும் கிடையாதோ அந்த மஹேசன் என்பதே இச்செய்யுளின் பொருளாகும்.
                வேதா த்வேதா ப்ரமம் சக்ரே காந்தஸு கனகேஷு ச |
       தாஸு தேப்வப்யநாசக்த: ஸாக்ஷாத் பர்க்கோநராக்ருதி: ||

என்ற ஒரு செய்யுள் இவ்விடத்தில் எனக்கு நினைவுக்கு வருகிறது. உலகத்தைத் தோற்றுவித்த பிரமன் பெண்ணாசை பொன்னாசை என்ற இரண்டையும் மக்களின் முன்னேற்றத்துக்குத் தடையாக ஏற்படுத்தியுள்ளார். அதாவது இவ்விரண்டு விஷயங்களிலும் பற்றுள்ளவன் இவ்விலகபந்தத்திலிருந்து மீளவே முடியாது. அப்படியொருவன் இவ்விரண்டிலும் அறவே பற்றற்றவனாய் ஆகிவிடு வானேயானால் அவன் மனிதனாக இருக்க முடியாது. மனித உருவத்தில் தோன்றிய மஹேசனே ஆவான் என்பது இச்செய்யுளின் பொருளாகும். முன்செய்யுளின் முதலடியில் மஹேசனுக்குப் பொருளாசையில்லை என்பதும், இரண்டாமடியில் பெண்ணாசையில்லை என்பதும், சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. ‘நிர்மமோ நிரஹங்கார:’ என்றும் பெருமையாகக் கூறுவார்கள். மூன்றாமடியில் இக்கருத்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது கவனத்திற்குரியது.
      மஹாகவி காளிதாஸரின் சிவபக்தி மேம்பாட்டையும், அவர் சிவபெருமானைப் போற்றியுள்ள முறைமையையும் ஓரளவு கண்டோம். சமயம் வாய்க்கும் போது மேலும் மஹா கவியின் சிவபக்திச் சிறப்பினை விளக்குவோம்.

சிவம்.

No comments:

Post a Comment