Monday, September 26, 2016

ஶ்ரீ சிவாப்யாம் நம:

சிவபிரானின் ஸம்ஹார க்ருத்ய விளக்கம்
தர்மக்ஞ, சிரோமணி, வித்யாவாசஸ்பதி
பிரம்மஶ்ரீ மாயூரம் ராமநாத தீக்ஷிதர்

சிவஞான பூஜா மலர் குரோதன ஆண்டு - (1985)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]

      பிராணிகளைனைத்தும் சுகத்தையே விரும்புகின்றன. துக்கத்தைக் கொஞ்சமேனும் விரும்புவதில்லை. ஆனால் அதிகமாய் வருவது துக்கமேயாகும். தீமையின் பயன் துக்கம், நன்மையின் பயன் சுகம். தீமை அதிகமானதால் துக்கம் அதிகம் வருகிறது. புலன்களைக் கொண்டு அனுபவிக்கும் சுக துக்கம் இவ்விதமுள்ளது. ஆனால் ஆத்மா சுகரூபமானது. அந்த சுகத்தையனுபவிக்க வினைதேவையில்லை. அது சுஷுப்தி என்னும் உறக்க நிலையில் திரைகள் விலகிய பிறகு தானாகத் தோன்றுகிறது. ஆத்ம ஸ்வரூபத்தை *ஸ்தூலம், ஸூக்ஷ்மம், காரணம் என்ற மூன்று சரீரங்கள் மறைக்கின்றன.
[* ஸ்தூல சரீரம் என்பது கை கால்களுடன் விளங்கும் உடல், ஸூக்ஷ்மம் என்பது, கண்காது முதலிய ஞானேந்திரியங்கள் ஐந்து, கைகால் முதலிய கர்மேந்திரியங்கள் ஐந்து ப்ராணன்அபானன் முதலிய ப்ராணங்கள் ஐந்து, மனம், புத்தி ஆக 17-ம் கொண்டது. காரண சரீரம் என்பது அஞ்ஞானம் அவித்தை. இந்த மூன்று சரிரங்களும் ஜாக்ரத் என்னும் விழிப்பு நிலையில் மறைக்கின்றன.]
ஸ்வப்னத்தில் இரு சரீரங்களும் மறைகின்றன. மனம் மட்டும் இருந்து ஸ்வப்னப் பொருள்களை விளக்குகிறது. ஸூஷுப்தியில் மனமும் லயித்து விடுகிறது. அஞ்ஞானம், அவித்யை என்னும் காரண சரீரம் மட்டும் உளது. து வெண்மையான மெல்லிய துணி போல் கொஞ்சம் மறைக்கிறது. ஆனாலும் ஆத்மசுகம் விளங்குகிறது. அதுவே பகல் முழுவதும் பல துன்பங்களை அனுபவித்த சரீரத்திற்கும் புலன்களுக்கும் இளைப்பாறும் சமயம். அந்த சுகானுபவம் ஒரு நாளில் மிகக்குறைவாக ஏற்படுகிறது. இவ்விதம் உலகத்தை மறந்து தூங்கினால் மறுநாள் புலன்கள் சுறுசுறுப்பாக உழைக்கின்றன. இல்லாவிடில் வேலை செய்ய முடிவதில்லை. இதனால் ஆத்மசுகம் ஒன்றே உண்மையான சுகம் என்று தெரிகிறது. அது விளங்குவதற்கு இடையூறாகவுள்ள திரைகள் விலக வேண்டும். இதைச் சாந்தோக்ய உபநிடதம், ஸுஷுப்தி காலத்தில் ஜீவன்ஸவம்’ (தனது) ரூபத்தையடைகிறான், “ஸ்வம் ஹ்பீதோ பவதிஎன்று கூறுகிறது. இந்தச் சுகத்தை ஒவ்வொரு நாளும் மிக ஸ்வல்ப காலம் அனுபவிக்கின்றோம். இதை நீண்ட காலம் அட்னுபவித்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். இந்த மகிழ்ச்சியைக் கொடுக்க யாராலும் முடியாது. பரமேச்வரன் ஒருவனால் தான் முடியும் என்பதை விளக்குவது இந்த வசனம்.
                விச்ராந்த்யை பவதார கின்னமனஸாம் பாகாய கர்மாவலே: |
       மாயாயா பலஸம்பவாய குருதே சம்புர்மஹாஸம்ஹ்ருதிம் ||
               
சிவபெருமானை உலகத்தந்தையாகக் கூறுகிறார்கள். ‘ஸோம: ஜநிதா திவ: ஜநிதா ப்ருதிவ்யா:’ (வேதம்) ‘ஜகத: பிதரெள வந்தே பார்வதீ பரமேச்வரெள’ (காளிதாஸன்). சில சமயம் தாயுமாகிறார் (தாயுமானவர்). மக்களின் துன்பத்தைப் போக்கிய இன்பத்தையளிப்பது தந்தையின் ஸ்வபாவம். உலகம் தோன்றிய நாள் முதல் பிறந்து பிறந்து பலவித துன்பத்டையடையும் பிராணிகளிடம் தந்தையான சிவபிரானுக்குக் கருணையேற்பட்டது. துன்பத்தை விலக்கி இன்பத்தை அளிக்க விரும்பினார். இன்பம் ஜீவனின் ஸ்வரூபம். அதை மறைக்கிறது சரீரம். சரீரத்தை அழித்தால் இன்பம் தானாக விளங்கும் என்று ஸம்ஹார காலத்தில் பிராணிகளின் சரீரத்தை அழிக்கின்றார். குல்ம வியாதியினால் சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், வேலை செய்ய முடியாமல் துன்பப்படும் மனிதனை அறுவை சிகிச்சை செய்து வியாதியை விலக்கும் வைத்தியனைப்போல துக்ககரமான சரீரத்தை விலக்குகிறார். அதனால் அவருக்கு, “ருத்ரன்” (ருத் – துக்கம்; த்ராவயதி – போக்கடிக்கிறான்). அதாவது துன்பத்தைப் போக்கடிப்பவன் என்று பெயர். இதையறியாத மூடஜனங்கள் ருத்ரன் அழிப்பவர், அவரை சேவிக்கக் கூடாதென்று, வ்ரண சிகிச்சை செய்யும் வைத்தியரை வைவது போலப் புலம்புகின்றனர். உண்மையை உணர்ந்தால் இன்பத்தைக் கொடுப்பவர் அவரே என்பது விளங்கும். அதனால் தான் “சம்புர் மஹா ஸம்ஹ்ருதிம்” ஸம்ஹாரம் செய்பவர் சம்பு என்று கூறுகிறது இந்த வசனம். சம் – சுகம். க்ஷேமம்; புனக்தி – அனுபவிக்கச் செய்பவர் என்பது இதன் பொருள். ‘சன்னோமித்ர: சம் வருண:’ என்ற உபநிஷத்தில் ‘சம்’ என்பதற்கும் க்ஷேமம் என்ற இதே அர்த்தம் தான்.
அதனால் ப்ரளய காலத்தில் ஸ்தூல சரீரம் இல்லை. ஸூக்ஷ்ம சரீரம் இருந்தும் சக்தியற்றது. காரண சரீரத்தினால் அதிக இடையூறு இல்லை. பிராணிகள் ஆத்ம சுகத்தையனுபவிக்கிறார்கள். இவ்விதம் இளைப்பாறினால் தான் மறு சிருஷ்டியில் பிறந்து பிறந்து வேலை செய்ய முடியும். பிறப்பிறப்பு என்ற வியாதி அவரவர் வினையினால் அநாதியாய் வருகிறது. அதைப் போக்க சிவப்ரஸாதத்தினால் தத்வ ஞானத்தையடைய வேண்டும். இதையடைவதற்காகவே வேதம், சாஸ்திரம், புராணம், இதிஹாஸம், ஆகமம் எல்லாம் ஏற்பட்டிருக்கின்றன. அது பல ஜன்மாக்களில் புண்யத்தினால் கிடைக்க வேண்டும். இவ்விதம் பிராணிகள் அனைத்துக்கும் ஆத்ம சுகத்தை அளிப்பதற்காக ஸ்தூல ப்ரபஞ்சத்தை அழிக்கிறார் என்பது ‘விச்ராந்த்யை பவதாபகிந்நமனஸாம்’ என்ற முதலடியின் கருத்து.
மேலும் சுகம் துக்கம் இரண்டும் புண்யம் பாபம் இவற்றின் பயனாக வருகிறது என்று கூறினோம். புண்யம், பாபம் இவை செய்தவுடன் பயனையளிப்பதில்லை. பரிபாகமடைந்து தான் பயனளிக்கும். அதனாலேயே முன் ஜன்மத்தின் வினை என்று கூறுகிறோம். மனுஸ்ம்ருதியிலும் புண்யமோ பாபமோ தன்னிடத்தில் பயனையளிக்காவிட்டால் பிள்ளையிடமும் அதுவும் முடியாவிட்டால் பேரனிடமும் பயனையளிக்கும் என்று கூறுகிறது.
இதனால் வெகு நாட்கள் பாகமடைய வேண்டுமென்று தெரிகிறது. பிராணிகளின் புண்ய பாபங்கள் பரிபாகத்தை அடையவும் உலகத்தை மறைக்கிறார் என இரண்டாவது அடி விளக்குகிறது. “பாகாய கர்மாவலே.”
மேலும், பரசிவம் தனது மாயா சக்தியினால் உலகத்தை உண்டுபண்ணி காப்பாற்றுகிறார் என்பது சாஸ்திரங்கள் கூறும் உண்மை. ஜடப்பொருளானாலும் வெகுநாள் வேலை செய்தால் தேய்ந்துவிடும். மறுபடி பழுது பார்த்து உபயோகப்படுத்துகிறோம். அதுபோல வேலையே இல்லாமல் கொஞ்ச நாள் இருந்தால் மறு ஸ்ருஷ்டியில் மாயை நன்றாகா வேலை செய்யும் என்றும் ப்ரளயம் செய்கிறார் என்பதை மூன்றாவது அடி விளக்குகிறது. “மாயாபா பலஸம்பவாய குருதே சம்புர் மஹாஸம்ஹ்ருதிம்”.
இவ்விதம் அரியபெரிய வேறு யாரும் செய்ய முடியாத காரியத்தை உலக நன்மைக்காகச் செய்யும் ஸ்வதந்த்ர புருஷனான பரமேச்வரனையும் அவருடைய அற்புத லீலையையும் அறிவதற்கு அனேக ஜன்மாவின் ஸுக்ருதம் வேண்டும். அத்தகைய ஸுக்ருதமுன்னவர் அறிந்து அவரதருளைப் பெறுமாறு வேண்டுகிறேன்.
சிவம்
     


No comments:

Post a Comment