Sunday, July 3, 2016

நமச்சிவாய புஜங்கம்
தர்மப்ரவசன ரத்னம், உத்தம உபன்யாசக சக்ரவர்த்தி
பிரம்மஶ்ரீ மஞ்சகுடி கே. ராஜகோபால சாஸ்திரிகள்

சிவஞான பூஜா மலர்குரோதன ஆண்டு - (1985)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]
     
                நமச்சப்தமாத்ரே ஸதாதுஷ்டதேவம்
       நதாநாம்முனீனாம் ஹ்ருதிஸ்தம்கிரீசம்,
       நரேந்த்ராதிபத்யம் ததந்தமவஹந்தம்
       நமச்சிவாயேதி பதாபிதம்ஸ்துவே.                       1

1.     ‘நமஎன்றதும் ஸந்தோஷமடையும் தெய்வம், வணங்குமின்ற முனிவர்களின் உள்ளத்தில் இருந்து, ராஜ்யத்தைக் கொடுத்தும் வஹித்தும் வரும் கிரீசனான சிவபெருமானை நமச்சிவாய என்ற பதத்தினால் அழைத்து ஸ்துதி செய்கின்றேன்.
                மஹாதேவமீசம் மஹாவாக்ய்கேஹம்
       மஹாத்மானமேகம் மஹத்தத்வமூர்த்திம்
       மஹாருத்ரயஜ்ஞை: ஸதாஸ்தூயமானம்
       நமச்சிவாயேதி பதாபிதம்ஹுவே.                        2

2.     மஹாதேவன், ஈசன் மஹாவாக்யத்தையே உறைவிடமாகக் கொண்ட மஹாத்மா, ஒரே கடவுள், மஹத் தத்வமுடைய மூர்த்தி, மஹாருத்திரங்களினால் எப்பொழுதும் துதிக்கப்படுகிறவர் ஆகிய சிவபெருமானை நமச்சிவாய என்ற பதத்தினால் அன்போடு அழைக்கின்றேன்.
                சிவம்சாந்தமூர்த்திம் சிஷ்டைகபூஜிதம்
       ச்ரிதாங்க்ரிஸ்வபக்தான் ஸதைவாபிரக்ஷம்
       ச்ரியம்ஸந்ததானம் சிலாரூபமாத்யம்
       நமச்சிவாயேதி பதாபிதம்நமே.                          3

3.     சிவன், சாந்தமூர்த்தி, சிஷ்டர்களால் பூஜிக்கப்ப்டுபவர், தனது பாதத்தை யண்டினவர்களை எப்போதும் ரக்ஷிப்பவர், ஐச்வர்யட்தைக் கொடுப்பவர், சிலாரூபமாகத் தோன்றினாலும் ஆதிரூபமில்லாதவர். இத்தகைய சிவபெருமானை நமச்சிவாய என்று சொல்லி வணங்குவேன்.
       வாக்தேவதாஸ்தோத்ர த்ருப்தம்ச்ருதேர்கிராம்
       பாரேவஸந்தம்யோகி ஹ்ருத்த்யேயமூர்த்திம்,
       வகாராதிபீஜம் அம்ருதஸ்வரூபம்
       நமச்சிவாயேதி பதாபிதம்ப்ருவே.                    4

4.     வாக்தேவதையான ஸரஸ்வதியின் ஸ்துதியினால் திருப்தி அடைந்தும், வேதத்தின் முடிவில் வஸித்தும், யோகிகளின் ஹ்ருதயத்தினால் தியானம் செய்யப்பட்டும், ‘என்ற அம்ருத பீஜமாக இருக்கும் சிவபெருமானை நமச்சிவாய என்று கூறுவேன்.
       யம்தேவதேவம் நமச் சப்தபூர்வம்
       சிவாயேதிமந்த்ரம் தத்சிவாகாரமேதி,
       சிதானந்தந்ருத்யம் ஸுதாதாத்ருசக்திம்
       நமச்சிவாயேதி பதாபிதம்பஜே.                       5

5.     எந்த தேவதேவனைநமஎன்று ஆரம்பித்துசிவாயஎன்று மந்திரம் சொன்னவுடன் சிவஸ்ரூமாக ஆகி ஆனந்த நர்த்தனஞ் செய்யும் அம்ருதசக்தியைக் கொடுக்குமோ அந்த நமச்சிவாய மந்திரத்தை பஜிக்கிறேன்.
நமச்சிவாய புஜங்கம் உரையுடன் முற்றிற்று.

      




No comments:

Post a Comment