Sunday, July 31, 2016

சிவமயம்
ஶ்ரீ மஹாதேவ ஜயம்
நாராயண பட்டதிரியின்
அஷ்டமீ பிரபந்தத்தினின்றும்
சிவ தண்டகம்
உரை: டாக்டர் . கங்காதரன் எம்.., எம்.லிட்., பிஹெச்.டி
ஸமஸ்க்ருத விரிவுரையாளர், சென்னை பல்கலைக்கழகம்

[சிவஞான பூஜா மலர்துந்துபி ஆண்டு - (1982)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033] 
      ஜய ஜய ஜகதேகநாத! பிரபோ! தேவதேவ! ப்ரஸீத த்ரிசூலின்! கபாலின்! பவாம்போதி மத்யே ஸதாபத்த கேதம் முஹுர்மஜ்ஜனோன்மஜ்ஜனைர் முஹ்யதே மஹ்யமாக ப்ரதேஹி ப்ரமோதேன தே பாதபங்கேருஹம் நாவமாவிர்தயம்! த்வத்பதாம்போருஹாதந்யதஸ்மாத்ருசாம் கிம் ஸமாலம்பனம் ஸாந்த்ரகாருண்யஸிந்தோர்! ஸதாமேக பந்தோ! ஜகத் – ஸ்ருஷ்டி – ரக்ஷா – விநாசைக – தீக்ஷா – துரீணா மரீணாமார்த்ர – காருண்ய – தாராஸுதா – தோரணீ – ஸாரணீம் பக்திபாஜாம் ஜநானாமஹந்தா – லதாகர்த்தரீம் ம்ருத்யு ஜன்மாதி – ஸந்தாப – வித்வமஸ – ஸித்தெளஷதிம் தேஹி துஷ்டாமிதோ த்ருஷ்டிமிஷ்டப்ரதாம் நெளமி நித்யம்.
      உலகமனைத்திலும் சிறந்த தெய்வமே! நீர் வெல்வீராக! பெருந்தலைவரே! வானவர்க்கும் தலைவரே! அருள்புரியுங்கள். திரிசூலம் தாங்கியவரே! மண்டை ஓட்டைத் தாங்கியவரே! பிறப்பு, இறப்பு என்னும் ஆழ்கடலின் நடுவில் எப்பொழுதும் கட்டுண்டு வருந்தி, மீண்டும் மீண்டும் மூழ்கி எழுவதால் மயக்கமுற்ற எனக்கு மிக்க மகிழ்ச்சியுடன் உம்முடைய பாதத் தாமரைகளை விரைவில் தாரும்! பாதத் தாமரைகளான படகினில் ஏறிவிட்டேன். உம் பாதத் தாமரையைத் தவிர்த்து எங்கள் போன்றவர்க்கு பிடிப்பு ஏது? அளவற்ற கருணைக்கடலே, நல்லவர்களுக்குச் சிறந்த உற்றவரே! உலகினைப் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மேம்பட்ட கடமையில் சிறந்தவரின் வற்றாத நெகிழும் கருணை ஊற்றின் அமிர்தமயமான வெள்ளப் பெருக்கின் வாய்க்காலும் பக்தி பெருகும் மக்களின் அகந்தை என்னும் கொடியைக் களையும், மரணம், பிறப்பு முதலான துன்பங்களை அழிக்கும் அருமருந்தைக் கொடுங்கள். மகிழ்வுற்றதும் விரும்பியதை வழங்குவதுமான பார்வையை இப்பொழுதிலிருந்து எப்பொழுதும் வணங்குகின்றேன்.
      க்வசிச்சஞ்சதஞ்சஜ்ஜடாமண்டலீ ஹிண்டமான ஸ்புரத் ஸ்வஸ்ஸரிந்நிஸ்ஸரல்லோல – கல்லோல – ஹல்லோஹலத்வான நிர்தூதலோகம், க்வசிச்சாரு – தம்மில்ல – பாரோல்லஸந் மல்லிகாவல்லர் – நிர்யதாமோதஸம்பார – ஸம்ப்ராம்ய துத்தால – மத்தாவிஜங்கார – ச்ருங்காரிதாசாந்தராலம், க்வசிந்முண்டமாலாகணைர்மண்டிதம், குத்ரசித் புல்ல மெளல்யுத்கரைருல்லஸந்தம், க்வசித் பஸ்மபுண்ட்ரோல்ல ஸத்பாலதேசம், க்வசிந்நீலலோலாளகாளீ – ஸமுல்லாஸி வக்த்ராரவிந்தம், கவ்சித் பாலநேத்ரோ – ஜ்வலத்வீதி ஹோத்ரம், க்வசிச்சித்ர – கஸ்தூரிகா – சித்ரகாலங்க்ருதம் குத்ரசித் பக்த – த்ருஷ்ணா – லதா – கந்ததாத்ராயிதாரக்த நேத்ராஞ்சலம், குத்ரசித் வித்ரஸத் – பால – ஸாரங்க – யோஷிச் சலாபாங்க – பங்கீபிரங்கீக்ருதம், குத்ரசித் பூரிபூதிஸ்புரத் பாண்டுகண்டஸ்தலம், குத்ரசிச்சித்ரபத்ராங்குரைரங்கிதம், குத்ரசித் கர்ணபூஷாபதோத்பாஸித – ஸ்தூலகத்ரூஸுதம், க்வாபி கண்டஸ்கலத்குண்டலாலக்ன – ப்ரபாபாஸுரம், க்வாபி ச ஸ்பீத – வக்ஷஸ்தலாகுண்ட – பஸ்மாவகுண்டோ ஜ்வலம், க்வாபி சோத்துங்க – பீனஸ்தனாஸக்தகஸ்தூரிகா கர்தமம், குத்ரசில்லம்பமானாஸ்தி – மாலாகணம், க்வாபி சாமுக்தமுக்தாவலீ – பந்துரம், குத்ரசித் பஸ்மநா பாஸமா னோதரம், க்வாபி சாபீன – வக்ஷோருஹக்லாந்த புக்னாவலக்னம் க்வசித்வ்யாக்ர – சர்மாம்பராகம்ர – சோபம், க்வசிச்சாபி கம்பந்நிதம்பஸ்தலோத்யத் – தகூலாஞ்சலாபத்த – காஞ்சீ கலாபம், க்வசித்போகிவ்ருந்தஸ்புரத்பாதபத்மம், க்வசிந்மஞ்ஜுசிஞ்ஜானமஞ்ஜீரகாலங்க்ருதம் கோத்ரராஜாத்மஹா – காத்ர – மிச்ரீபவந்தம் பவந்தம் ஸதா மானஸே சீலயாம.
      ஓரிடத்தில் அசைகின்ற சுருண்ட சடையில் ஓடுகின்ற பொங்கும் தன் ஆற்றிலுள்ள அலைகளின் ஒலியினால் அசைக்கப்பட்ட உலகத்தை உடையவரும், ஓரிடத்தில் அழகிய கூந்தல் தாங்கும் ஒளிரும் மல்லிகைக் கொடியினின்று வரும் நறுமணப்பெருக்கினால் சுழலும் பெரும் குடிமயக்கம் கொண்ட வண்டுகளின் ரீங்காரத்தினால் கவர்ச்சியாக்கப்பட்ட திசைகளை உடையவரும், ஓரிடத்தில் முண்டமான உடல்களாலான மாலையையணிந்த பூதகணங்களால் சூழப்பட்டவரும், ஓரிடத்தில் தலைமீது மலர்ந்த அசோக மலர்களினால் விளங்குபவரும், ஓரிடத்தில் திருநீறு ஒளிரும் நெற்றிப் பகுதியை உடையவரும், ஓரிடத்தில் அசைந்தாடும் கருத்த கூந்தலில் வண்டுடன் ஒளிரும் முகத்தாமரையை உடையவரும் ஓரிடத்தில் நெற்றிக்கண்ணின்றும் ஜ்வலிக்கும் நெருப்பை உடையவரும், ஓரிடத்தில் பிரகாசிக்கும் கஸ்தூரியினாலான நெற்றிப் பொட்டினால் அலங்கரிக்கப்பட்டவரும், ஓரிடத்தில் தம் பக்தர்களின் ஆசை என்னும் கொடிச்சுழலைக்களைவதினால் சிவந்த கடைக்கண் பகுதியை உடையவரும், ஓரிடத்தில் பயந்த இளம்புள்ளிமானின் மிரண்டு கடைக்கண் பார்வைகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டவரும், ஓரிடத்தில் நிரம்ப திருநீறு ஒளிரும் வெளுத்த கழுத்துப்பகுதியை உடையவரும், ஓரிடத்தில் பிரகாசிக்கும் இலைத்துளிர்களின் குறியை உடையவரும், ஓரிடத்தில் காதணியாக ஒளிரும் பருத்த அரவத்தை உடையவரும், ஓரிடத்தில் கன்னத்தில் தொங்கும் குண்டலங்களிலுள்ள இரத்தினங்களின் ஒளியினால் விளங்குபவரும், மேலும் ஓரிடத்தில் பரந்த மார்பில் பரவிப் பூசப்பட்ட திருநீறுடன் ஒளிர்பவரும், ஓரிடத்தில் உயர்ந்த பருத்த ஸ்தனபாகத்தில் பூசப்பட்ட கஸ்தூதிக் குழம்பை உடையவரும், ஓரிடத்தில் தொங்கும் அஸ்தி மாலையின் தொகுப்பை உடையவரும், ஓரிடத்தில் அணியப்பட்ட முத்துமாலையுடன் விளங்குபவரும், ஓரிடத்தில் திருநீறினால் ஒளிரும் வயிற்றுப் பகுதியை உடையவரும், ஓரிடத்தில் பருத்த மார்பினால் சோர்வுற்று வளைந்த இடுப்பை உடையவரும், ஓரிடத்தில் புலித்தோலணிந்ததினால் அழகிய தோற்றத்தை உடையவரும், ஓரிடத்தில் உடலின் பின் பகுதியின் ஒளிரும் பட்டின் நுனியில் கட்டப்பட்டு சிறந்து விளங்கும் ஒட்டியாணத்தை உடையவரும், ஓரிடத்தில் அரவங்களின் கூட்டங்கள் துள்ளி விளங்கும் பாதத்தாமரைகளை உடையவரும், ஓரிடத்தில் கவர்ச்சியாக ஒலிக்கும் சதங்கையினால் அழகு செய்யப்பட்டவரும், மலையரசனின் மகளின் உடலுடன் ஒன்றிய வருமான உம்மை (எம்) மனத்தில் எப்பொழுதும் வழி படுகின்றோம்.
      ஸ்தா த்வத்பதாம்போருஹ – த்வந்த்வ – ஸம்ஸேவனாதந்ய தேகம் ந வாஞ்சாம்யஹம்; க்ருத்தி த்ருஷ்ணாலதாம்; சிந்தி ஸம்ஸாரபந்தம்; மனோவாகலப்யஸ்ரூபாய துப்யம் நம:; ஸச்சிதானந்தகந்தாய துப்யம் நம:; ஸர்வ – வேதாந்த ஸித்தாந்த – தத்வார்த்த – ஸார – ஸ்வரூபாய துப்யம் நம:; நித்ய சுத்த – ப்ரபுத்தாய துப்யம் நம:; ரஜ்ஜுஸர்பாபமேதத் ஸம்ஸ்தம் ப்ரபஞ்சம் ஸதா பச்யதாம் யோகபாஜாம் ஜனானாமிடா – பிங்கலா – நாடி – ஸந்நத்த – கம்பத்ஸும்னா – மஹா நாடி – மத்யே விசுத்தே ஸ்மாதெள ஸ்புடம் பாஸமானாய ஸம்வித்ப்ரகாசாய துப்யம் நம:; பாஹி பாஹி ப்ரபோ! மன்மதாரே! மஹாதேவ! சம்போ! க்ருபாம்போதிதே! ஹே ப்ரபோ! விச்வமூர்த்தே! நமஸ்தே நமஸ்தே நமஸ்தே (அ)ஸ்து சம்போ! நம: !
      எப்பொழுதும் உம்மிரு பாதத்தாமரைகளை வழிபடுவதைத் தவிர மற்றெதையும் நான் விரும்பவில்லை. ஆசைக் கொடியைக் கத்தரித்துவிடும் பிறப்பு, இறப்பு என்னும் பிணைப்பைக் களைந்துவிடும், மனத்தாலும் சொல்லாலும் அடையமுடியாத உருவமுடைய உமக்கு வணக்கங்கள். ஸத், சித், ஆனந்த வடிவமான உமக்கு வணக்கங்கள். அனைத்து வேதாந்த சித்தாந்த தத்துவப் பொருள்களின் ஸாரவடிவான உமக்கு வணக்கங்கள். எப்பொழுதும் தூய ஞானியான உமக்கு வணக்கங்கள் கயிறு ஒரு அரவம் போலத் தோற்றமளிக்கும் இந்த பிரபஞ்சமனைத்தையும் எப்பொழுதும் நோக்கும் மக்களுடைய இடை, பிங்களை என்னும் இவ்விரு நாடிகளால் சூழப்பட்டு ஒளிரும் ஸுஷும்னை என்னும் சிறந்த நாடியின் நடுவே தூயமான ஸமாதி நிலையில் துல்யமாகப் பிரகாசிக்கும் ஞானவடிவாய்த் திகழும் உமக்கு என் வணக்கங்கள். என்னைக் காத்திடும்! காத்திடும்! பிரபுவே! காமனின் பகைவரே! தெய்வங்களுள் சிறந்தவரே! செல்வத்தைக் கொடுப்பவரே! கருணைக்கடலே! ஓ! பிரபுவே! உலகவடிவானவரே! உமக்கு என்னுடைய வணக்கங்கள். ஓ! செல்வத்தைக் கொடுப்பவரே!
      [உரையாசிரியர் குறிப்பு: திருமாலின் மீது நாராயணீயம் என்னும் சிறந்த தோத்திரத்தைப் பாடி புகழ் பெற்ற மேல்புத்தூர் நாராயணபட்டர் திருமாலிடம் ஈடுபாடு கொண்டவர் என்றும் அதனால் அவர் தம் நூலில் மற்ற தெய்வங்களைக் குறைத்துக் கூறியிருக்கிறார் என்றொரு கருத்து நிலவுகிறது. அதற்கு மாறாக அவர் சிவனாரையும் சிறப்பாகப் பாடியதொரு நூல் இருக்கிறது என்று யாவரும் அறிய அவருடைய இந்த நூலை இங்கு மொழி பெயர்த்து தந்துள்ளேன். கேரளத்தில் வைக்கம் என்றதொரு புகழ் பெற்ற சிவத்தலம் உள்ளது. அங்கு ஒரு சிறந்த சிவாலயம் உள்ளது. அங்கு ஆண்டுதோறும் இருமுறை கார்த்திகை, மாசி இவ்விரு மாதங்களிலும் அஷ்டமி திதியில் திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவினை விவரித்து நாராயணபட்டர் ‘அஷ்டமீ சம்பூ’ அல்லது ‘வ்யாக்ராலயேசாஷ்டமீ மஹோத்வை சம்பூ’ என்னும் ஒரு சிறு நூலை இயற்றியுள்ளார். 40 செய்யுட்களும் 22 உரைநடைப் பகுதிகளும் உள்ள இந்நூலில் சிவனாரைப் போற்றும் தண்டகம் ஒன்றை அமைத்துள்ளார். இந்த தண்டகம் வடிவில் சிறிதே ஆயினும் அதன் சொல் நயமும் பொருள் நயமும் படிப்பவர் மனத்தைக் கவரவல்லது என்பதில் சிறிதும் ஐயமில்லை. தாம்பாடும் பொருளை அனைத்திலும் உயர்ந்ததாகக் கூறுவது கவிகளில் இயல்பு. அவ்வாறே இங்கும் சிவனாரை சிறப்பாகக் கொண்டாடும் சில்வ சொற்றொடர்கள் அமைந்துள்ளன. உதாரணமாக, ‘ஜகதேகநாத’, ‘த்வத்பதாம்போருஹாதன்ய – தஸ்மாத்ருசாம் கிம் ஸமாலம்பனம்’, ‘ஏகப்ந்தோ’. முதலியவற்றைக் கூறலாம். இந்த தண்டகத்தைப் படித்து இன்புற்று பரமனின் அருளுக்குப் பாத்திரமாவோம்.]

சிவம்.

No comments:

Post a Comment