உ
சிவமயம்
ஶ்ரீ மஹாதேவ ஜயம்
மஹாபாரதம் கூறும் ஸ்கந்த மஹிமை
(வனபர்வாவில் உள்ளது)
தர்ம பிரவசன ரத்னம், உத்தவ உபன்யாஸ சக்கரவர்த்தி
மஞ்சக்குடி கே. ராஜகோபால் சாஸ்திரிகள்
[சிவஞான பூஜா மலர் – துந்துபி ஆண்டு - (1982)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]
ஶ்ரீ மஹாபாரதம் என்ற அரும்பெரும் அற்புதமான இதிஹாஸத்தில் ஶ்ரீ முருகப்பெருமானின் அளவற்ற பெருமையை மார்க்கண்டேயர் கூறுவதை வனபர்வாவில் கண்டு ஸ்கந்த பக்தியைச் செய்ய வேண்டிய அவசியத்தையும் அறிந்து பெருவாழ்வு பெறலாம். முருகப் பெருமானின் பிறப்பு மஹாபாரதத்தில் மாறுதலாக இருப்பது கந்த புராணத்தைப் படித்தவர்களுக்குப் புரியும். நன்றாகா ஊன்றி கவனித்தால் மூலகிரந்தமான ஸ்காந்தமும் இதையே சொல்கிறது என்று தெளிவடையலாம். முருகப் பெருமானின் பிறப்பிலிருந்து சில அபூர்வ உலகு அறிய மஹாபாரதம் பேருதவி புரிகின்றது. குமரன் ஒருவராக இருப்பதில்லை. அவருடன் இருக்கும் தேவர்கள்,
க்ரஹா: ஸோபக்ரஹாச்சைவ ரிஷயோ மாதரஸ்ததா |
ஹுதாசன முகாச்சைவ த்ருப்தா: பாரிஷதாங்கணா: ||
ஏதேசந்யோ பஹவ: கோரா: த்ரிதிவவாஸிந: |
பரிவார்யமஹாஸேநம் ஸ்திதா: மாத்ருகணைஸ்ஸஹ ||
ஸ்கந்த மூர்த்தியுடன் க்ரஹங்கள், உபக்ரஹ்ங்கள், ரிஷிகள், தாய்மார்கள், அக்னி பகவான் முதலாக எப்போதும் இருப்பார்கள். ஸ்கந்த மூர்த்தியைச் சேவிப்பவர்கள் இத்தனை தேவதைகளையும் சேர்த்து ஸேவித்த பலனை அடைவார்கள்.
ஒரு சமயம் இந்திரன் படை பலத்துடன்
ஸ்கந்தமூர்த்தியிடம் சண்டையிட வந்தான். அப்போது பகவான் ஸ்கந்தன் தனது முகத்தினாலேயே
நெருப்பைக் கக்கி தேவர்களை தகிக்கச் செய்தார். தேவர்கள் நடுங்கி
தஹ்யமாநா: ப்ரபன்னாஸ்தே சரணம் பாவகாத்மஜம் |
தேவாவஜ்ரதரம்
த்யக்த்வா தத: சந்திமுபாகதா: ||
தஹிக்கப்பட்ட
தேஹத்துடன் தேவர்கள் குமரனைச் சரணமடைந்தார்கள். இந்திரன் மேலும் கோபமடைந்து வஜ்ராயுதத்தை
ஸ்கந்த மூர்த்தியின் வலது பார்கவத்தில் விட்டான். அதனால் ஶ்ரீ ஸ்கந்த மூர்த்தியின்
வலது பார்ச்வம் பிளந்தது. அந்த பாகத்திலிருந்து விசாகன் என்ற மூர்த்தி பிறந்தார்.
தத்விஸ்ருஷ்டம் ஜகாநாசு பார்ச்வம் ஸ்கந்தஸ்ய தக்ஷிணம்
|
வஜ்ரப்ரஹாராத்
ஸ்கந்தஸ்ய ஸஞ்ஜாத: புருஷோபர: ||
யுவா
காஞ்சனஸந்நாஹ: சக்தித்ருக் திவ்யகுண்டல: |
யத்வஜ்ரவிசநாஜ்ஜாத:
விசாகஸ்தேந ஸோஷ்யவத ||
விசாகன்
என்ற மூர்த்தி சக்தியை ஏந்தி பிரகாசிக்கிறார். என்றுமே ஸ்கந்தன் விசாகனை விட்டுப் பிரிய
மாட்டார். மேலும், இந்திரன் ஶ்ரீஸ்கந்த மூர்த்தியின் மேல் வஜ்ராயுதத்தினால் அடித்ததினால்
அந்த விசாகமூர்த்தி பிறந்ததும், அவரிடமிருந்து பெண்களும், பிள்ளைகளும், கன்யகைகளும்,
குமாரர்களும் பிறந்தார்கள்.
வஜ்ரப்ரஹாராத் கன்யாச்ச ஜக்ஞிரே(அ)ஸ்யமஹாபலா: |
குமாராஸதே
விசாகம் ச பிதருத்வே ஸமகல்பயன் ||
இவர்களுக்கு
ஸ்கந்த உபக்ரஹங்கள் என்று பெயர். ஶ்ரீஸ்கந்த மூர்த்தியிடம், விசாகருடன் ஸ்கந்த உபக்ரஹங்கள்
என்ற கன்யகையும் – குமாரர்களும் இருப்பதைக் கண்டு இந்திரன் விரோதமாக ஶ்ரீஸ்கந்த மூர்த்தியிடம்
போர் செய்து தோல்வியடைந்து ஶ்ரீஸ்கந்த மூர்த்தியைச் சரணடைந்து நீங்களே இந்திரனாக இருங்கள்
என்று விண்ணப்பித்தான். அப்போது
த்யமேவராஜா பத்ரம் தே த்ரைலோக்யஸ்ய மமைவ ச |
கரோமிகிஞ்ச
தே சக்ர சரஸநம்தத் ப்ரவீமி தே ||
தாநவாநாம்
விநாசாய தேவாநாம் அர்த்த ஸித்தயே |
கோப்ராஹ்மணஹிதார்த்தாய
ஸேனாபத்யேபிஷிஞ்சமாம் ||
ஶ்ரீ
ஸ்கந்தன் இந்திரனிடம் நீயே ராஜாவாக இரு. உனக்கு என்ன வேண்டுமோ அதை பூரணமாக செய்து கொடுக்கிறேன்.
அஸுரர்களை அழிக்கவும், கோக்களையும், பிராமணர்களையும் ரக்ஷிக்கவும் ஸேனாபதியாக இருக்கிறேன்.
எனக்கு ஸேனாபதி பட்டாபிஷேகம் செய்யலாம். அப்படியே ஸ்கந்தனுக்கு (குமரனுக்கு) ஸேனாபதி
பட்டாபிஷேகம் செய்தார் இந்திரன்.
ஏவம் ஸ்கந்தஸ்ய மஹிஷீம் தேவஸேனாம் விதுர்ஜநா:
|
ஷஷ்டீம்
யாம் ப்ராஹமணா: ப்ராஹு, லக்ஷ்மீ மாசாம்ஸுகப்ரதாம் ||
தேவஸேனை
என்ற பெண்ணையும் இந்திரன் தானம் செய்தார். அவளை ஷஷ்டி தேவி என்றூம் கூறுவர். அவள் லக்ஷ்மீ
கடாக்ஷம், ஸுகம் முதலானவைகளைத் தரும் தெய்வம் தேவஸேனை, ஒரு சமயம் மாத்ருகண்ங்கள் என்ற
தேவதைகள் ஸ்கந்த மூர்த்தியைப் பார்த்து
வயம்
ஸ்ர்வஸ்ய லோகஸ்ய மாதர: கவிபிஸ்துதா: |
இச்சாம்:
மாதரஸ்துப்பம் பவிதும் பூஜபஸ்வன: ||
நாங்கள்
இவ்வுலகுக்கு தாய்மார்கள் என்று கவிகள் கூறுகின்றார்கள். குமர, உனக்கும் நாங்கள் தாயாராக
இருக்க ஆசைப்படுகிறோம். எங்களைப் பூஜிக்க வேணும். குமரனும் அதைக் கேட்டு கூறினார்.
மாதரோஹி பவத்யோமே பவதீநாமஹம்ஸுத: |
உச்யதாம்
யன்மயாகார்யம் பவதீநாமதேப்ஸி ம் ||
தாய்மார்களே,
நீங்கள் எனக்கு தாயார்கள். உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்றார். அப்பொழுது
தாய்மார்கள்
இச்சாம
தாஸாம் மாத்ரூணாம் ப்ரஜாபோக்தும் ப்ரயச்சன:
இவ்வுலகில்
பிறக்கும் குழந்தைகளை எங்களுக்குக் கொடுத்து விடு என்றார்கள். குமரனும், அப்படியே கொடுத்து
விட்டார். மேலும் குமரன் இந்தத் தாய்மார்களை குழந்தைகளை ரக்ஷிக்க வேண்டும் என்று கேட்டுக்
கொண்டார். அவர்களும் அப்படியே ஆகட்டும் என்றார்கள். அந்த சமயம் ஸ்கந்தனுடைய சரீரத்திலிருந்து
நெருப்பு போன்ற ஒரு புருஷன் தோன்றினான்.
தத: சரீராத் ஸ்கந்தஸ்ய புருஷ: பாவகப்ரப: |
போக்தும்
ப்ரஜாஸ்ஸமர்த்யானாம் நிஷ்பபாத மஹாப்ரப: ||
அந்த
புருஷன் “ஸ்கந்தாபஸ்மாரக்ஹமித்யாஹு: க்ரஹம் தம் த்விஜஸத்தமா.” ஸ்கந்த அ[அஸ்மாரக்ரஹம்
என்று பெயர்.
யேச மாத்ருகணா: ப்ரோக்தா: புருஷாச்சைவ யேக்ரஹா: |
ஸர்வே
ஸ்கந்தக்ரஹாநாம க்ஞேயாநித்யம் சரீரிபி: ||
இந்த மாதிரி
கணங்களையும், புருஷக்ரஹங்களையும் ஸ்கந்த கிரஹங்கள் என்று மனிதனாகப் பிறந்தவன் அறிந்து
கொள்ள வேணும். இவர்கள் என்ன செய்வார்கள்? மனித ஸமுதாயத்தில் யாவத் ஷோடச வர்ஷாணி
சிசூனாம் ஹி அசிவா: தத: 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பலவித வியாதி வருவதைப்
பார்த்திருக்கிறோம். அதாவது, கை கால்களை இழுப்பது, வாய் கிட்டிப்பது, நாக்கைக் கடிப்பது,
மூர்ச்சையை அடைவது, புத்தி மாந்தியம், ஸதா ஜ்வரம், வளராமல் இருப்பது, குழந்தைகள் ஸதா
கோபப்படுவது, கட்டுப்படாமல் இருப்பது. முரட்டுத்தனமாக இருப்பது, கவனம் இல்லாமல் இருப்பது,
நல்வழி தோன்றாமல் இருப்பது போன்ற நிலை குழந்தைகளுக்கு இருப்பதை நாம் காண்கிறோம். அவைகள்
தேவக்ரஹம், பிதிருக்ரஹம், ராக்ஷஸகரஹம், பைசாசக்ரஹம், யக்ஷக்ரஹம் போன்றவைகள். இவைகள்
குழந்தைகளை 16 வயதுக்குள் வளரவிடாமலும், வலிப்பு போன்ற வியாதிகளைத் தோன்றச் செய்கின்றன.
இவைகளைப் போக்க, ஸ்கந்த மூர்த்தியையும், மாத்ருகணங்களையும் வழிபாடு செய்ய வேண்டும்.
தேஷாம் ப்ரசமனம் கார்யம் ஸ்நாநம் தூமமதாஞ்ஜனம் |
பலி
கர்மோபஹாரச்ச ஸ்கந்தஸ்யேஜ்யா விசேஷத: ||
இதற்குப்
பரிஹாரம் ஸ்நாநம், தூபம், அஞ்சனம், பலி போடுதல், கர்மாவான சாந்தி செய்தல், முருகனை
வழிபாடு என்ற முறையில் யாகம் செய்தல் முதலியவைகளாம். ஸ்கந்த கிரஹங்கள்
ஆஸ்திகம் ச்ரத்ததானம் ச வர்ஜயந்தி ஸதாக்ரஹா: |
நஸ்ப்ருசந்திக்ரஹா
பக்தான் நரான் தேவம் மஹேச்வரம் ||
ஆஸ்திகர்களையும்,
சிரத்தை உடையவர்களையும், பக்தர்களையும், தேவனையும் தொடமாட்டார்கள். மஹாபாரதம் என்ற
அரும்பெரும் இதிஹாஸத்தில், மார்க்கண்டேய முனிவர் தர்மபுத்திரரிடம் ஸ்கந்த பக்தி பண்ணவேண்டிய
அவசியத்தையும், ஸ்கந்த மூர்த்தி செய்யும் உபஹாரத்தையும் கூறியது மார்க்கண்டேய ஸமஸ்யாபர்வா
என்று வனபர்வாவில் உள்ளது. அதில் ஸ்கந்த புராணத்தை விட வேறு சிவ தர்மங்கள் உள்ளன. அதாவது
குழந்தைகளுக்கு வரும் வலிப்பு ஆகியவை மிகவும் கொடுமையானது. அது எங்கிருந்து உண்டானது,
இன்னமும் அதுபோன்ற நோய்கள் எந்த கிரஹத்தினால் உண்டாகிறது. இதைப் போக்கும் வழி என்ன
என்றும், மஹாபாரதம் நோய் ஒழிப்பைத் தெரிவிக்கவே ஸ்கந்த உபாஸனம் அவசியம் என்று கூறுகிறது.
ஸ்கந்த பக்தி பலவித ஸெளபாக்கியத்தைப் கொடுக்கும் என்றும் கூறுகிறது.
ப்ரஹ்மப்ரியோ ப்ராஹ்மணஸவ்ரதீத்வம் ப்ரஹ்மக்ஞோ
வைப்ராஹ்மணாநாம்ச
நேதா |
ப்ரஹ்மண்யோவை
ப்ரஹ்மஜோ ப்ரஹ்மவிச்வ ப்ரஹ்மே
சயோ
ப்ரஹ்மவதாம் வரிஷ்ட: ||
ஸ்வாஹாஸ்வதாத்வம்
பரமம் பலித்ரம் மந்த்ரஸ்துதஸ்
த்வம்
ப்ரதித: ஷடர்ச்சி: |
நமோஸ்து
தே த்வாதச நேத்ரபாஹோ அத: பரம் வேத்யி
கதிம் நதே(அ)ஹம் ||
பரப்ரம்ம
ஸ்வரூபமான ஸுப்ரஹ்மண்யத்தை ப்ரம்ம சப்தத்தால் கொண்டாடி 12 கண்கள் 12 கைகள் உடையவரை
விட வேறு கதி எனக்குக் கிடையாது என்று கூறும் அத்புதத்தை உணர்ந்து சிவஞான பூஜா மலரில்
வரும் இந்த கட்டுரையை ஏற்று ஸ்கந்த மூர்த்தியின் கிருபையைப் பெற வேண்டுகின்றோம்.
சிவம்.
No comments:
Post a Comment