உ
சிவமயம்
ஶ்ரீ மஹாதேவ ஜயம்
ஶ்ரீ ஆதிசங்கரர் அருளிச்செய்த
அர்த்தநாரீச்வர
ஸ்தோத்ரம்
தமிழ் உரை:
ஞானபாஸ்கர, சிவோத்கர்ஷவர்ஷக
பி. என். நாராயண சாஸ்திரிகள்
[சிவஞான பூஜா மலர் – துந்துபி ஆண்டு - (1982)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]
சாம்பேய கெளரார்த்தசரீரகாயை
கர்ப்பூரகெளரார்த்த சரீரகாய |
தம்மில்லகாயை ச ஜடாதராய
நம: சிஷாயை ச நம: சிவாய || 1 ||
1. சம்பகமலர் போன்ற வெள்ளையான பாதி உடலை உடையவளும்,
கர்ப்பூரம் போன்று வெளுத்த பாதி உடலை உடையவரும், அழகான பின்னல்களை உடையவளும், ஜடை முடியைக்
கொண்டவருமான ‘சிவா’ என்ற அம்பிகைக்கும், சிவபெருமானுக்கும் நமஸ்காரம்.
கஸ்தூரிகா குங்குமார்ச்சிதாயை
சிதாரஜ: புஞ்ஜவிசர்ச்சிதாய |
ச்ருதஸ்மராயை விக்ருதஸ்மராய
நம: சிவாயை ச நம: சிவாய || 2 ||
2. கஸ்தூரி குங்குமம் இவைகளால் அலங்கரிக்கப்பட்டவளும்,
பஸ்மத்தால் பூசப்பட்ட உடலையுடையவரும், மன்மதனை உயிர்பெறச்செய்தவரும், காமனை எரித்தவருமான
‘சிவா’ என்ற அம்பிகைக்கும், சிவபெருமானுக்கும் நமஸ்காரம்.
ஜணத்க்வணத் கங்கணநூபுராயை
பாதாப்ஜராஜத்பணி நூபுராய |
ஹேமாங்கதயை புஜகாங்கதாய
நம: சிவாயை ச நம: சிவாய || 3 ||
3. ஒலிக்கிறக் காப்பு கால் கொலுஸுகளையுடையவளும்,
பாம்புகளாகிற கால் சலங்கையை உடையவரும், தங்கத்தினாலான தோள்வளைகளை உடையவளும், பாம்பையே
தோள்வளையாகக் கொண்டவருமான ‘சிவா’ என்ற அம்பிகைக்கும், சிவபெருமானுக்கும் நமஸ்காரம்.
விசாலநீலோத்பல லோசநாயை
விகாஸிபங்கேருஹ லோசநாய |
ஸமேக்ஷணாயை விஷமேக்ஷணாய
நம: சிவாயை ச நம: சிவாய || 4 ||
4. அலர்ந்த கருங்குவளைமலர் போன்ற விழிகளை உடையவளும்,
மலர்ந்த தாமரை போன்ற கண்களை உடையவரும், நேரான கண்களை உடையவளும், முக்கண்ணருமான ‘சிவா’
என்ற அம்பிகைக்கும் சிவபெருமானுக்கும் நமஸ்காரம்.
மந்தாரமாலா கலிதாலகாயை
கபாலமாலாங்கித கந்தராய |
திவ்யாம்பராயை ச திகம்பராய
நம: சிவாயை ச நம: சிவாய || 5 ||
5. மந்தார மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட முடியை
உடையவளும் கபால மாலைகளை கழுத்திலணிந்தவரும், நல்ல பட்டுவஸ்திரங்களை யணிந்தவளும், திசைகளையே
வஸ்திரமாகக் கொண்டவருமான ‘சிவா’ என்ற அம்பிகைக்கும், சிவபெருமானுக்கும் நமஸ்காரம்.
அம்போதரச்யாமல குந்தலாயை
தடித்ப்ரபாதாம்ர ஜடாதராய |
நிரீச்வராயை நிகிலேச்வராய
நம: சிவாயை ச நம: சிவாய || 6 ||
6. மேகம்போல் கருத்த முன்மயிர்களையுடையவளும் மின்னல்
ஒளிபோல் சிவந்த ஜடைமுடியுடையவரும், தனக்கு மேல் இல்லாதவளும், உலகுக்கெல்லாம் ஈசனுமான
‘சிவா’ என்ற அம்பிகைக்கும், சிவபெருமானுக்கும் நமஸ்காரம்.
ப்ரபஞ்சஸ்ருஷ்ட்யுன்முக
லாஸ்யகாயை
ஸமஸ்த ஸம்ஹாரக தாண்டவாய |
ஜகஜ்ஜனந்யை ஜகதேகபித்ரே
நம: சிவாயை ச நம: சிவாய || 7 ||
7. உலகைப் படைக்கும் நடனத்தைக்கொண்டவளும் எல்லாவற்றையும்
அழிக்கும் ஆனந்த தாண்டவரும், உலகுக்குத் தாய்தகப்பன்களுமான ‘சிவா’ என்ற அம்பிகைக்கும்,
சிவபெருமானுக்கும் நமஸ்காரம்.
ப்ரதீப்தரேகோஜ்வல குண்டலாயை
ஸ்புரன்மஹா பன்னகபூஷணாய |
சிவாந்விதாயை ச சிவாந்விதாய
நம: சிவாயை ச நம: சிவாய || 8 ||
8. ஒளி விடுகிற காதுகுண்டலங்களை உடையவளும் பெரிய
பாம்புகளை அணிகலன்களாகக் கொண்டவரும், எப்பொழுதும் மங்களமான உருவங்கொண்டவர்களுமான ‘சிவா’
என்ற அம்பிகைக்கும், சிவபெருமானுக்கும் நமஸ்காரம்.
ஏதத்படேத் அஷ்டகமிஷ்டதம்யோ
பக்த்யா ஸ மான்யோ புவிதீர்க்கஜீவீ |
ப்ராப்நோதி ஸெளபாக்யம்
அனந்தகாலம்
பூயாத்ஸதா தஸ்ய ஸமஸ்தஸித்தி: || 9 ||
9. எவனொருவன் இந்த எட்டு சுலோகங்களைப் படிக்கிறானோ
அவன் உலகில் புகழ்பெற்ற நீண்ட ஆயுளுடன் வெகுகாலம் தனக்கு வேண்டியவைகளை அடைந்து எல்லா
வித ஸித்திகளையும் நன்கு பெற்று விளங்குவான்.
ஶ்ரீ ஆதிசங்கரர் அருளிய அர்த்தநாரீச்வர
ஸ்தோத்ரம்
தமிழ் உடையுடன் முற்றிற்று.
சிவம்.
No comments:
Post a Comment